×

ஆக்சிஜன் கொண்டுவர 2 காலி டேங்கர் லாரிகள் ஒடிசாவுக்கு சென்றன

சென்னை: இந்திய விமானப்படை விமானத்தில் 2 காலி டேங்கர் லாரிகள் ஒடிசா மாநிலத்திற்கு நேற்று அனுப்பப்பட்டன. அங்கிருந்து 30 மெட்ரிக்டன் ஆக்சிஜனுடன் ரயில் மூலம் சென்னை வர இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பலருக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை, மதுரை விமான நிலையங்களிலிருந்து, ஆக்சிஜன் ஏற்றி வருவதற்காக காலிடேங்கர் லாரிகளை இந்திய விமானப்படை விமானங்களில் வெளி மாநிலங்களுக்கு அனுப்புகிறது. அங்கு டேங்கர் லாரிகள் ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு, ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.

அதேபோல் சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று இந்திய விமானப்படை விமானத்தில் 2 டேங்கர் லாரிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டு, அடுத்த 2 நாட்களில் 30 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் ரயில் மூலம் சென்னை வர உள்ளது.

Tags : Odisha , 2 empty tanker trucks went to Odisha to bring oxygen
× RELATED “ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக...